கொழும்பு வீதி, கண்டியிலிருந்து, வெளிவந்துள்ள இதழ். இது 21 ஆவது இதழ். மலையக மக்களின் முன்னேற்றம் கருதி கருத்தளிப்பது. தமிழக இலக்கியவாதிகளோடு தொடர்புடைய இந்த இதழாளர் தமிழகத்தின் படைப்பாளிகளை இதழின் இணைத்துள்ளார். புதுமைப்பித்தன் பற்றிய வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை, இலங்கை மலையகத் தமிழ் உறவு அறக்கட்டளை நிகழ்வு பற்றிய குறிப்பு இதழில் உள்ளது. சாரல்நாடன் எழுதியுள்ள நடேசய்யர் பற்றிய கட்டுரை வரலாற்றில் பதிவாக நுட்பம் காட்டுவதே. வீரகேசரி இதழில் வெளிவந்த சாக்குக்காரன் இதழில் மறுபதிவாகியுள்ளது. புதிய தலைமுறை என்ற தலைப்பில் அட்டன் சிவனு மனோகரன் பற்றிய குறிப்பை எழுதியுள்ளது. மலையகப் படைப்பாளிகள் பற்றியும் எழுதியுள்ளது. உரைவீச்சு, துணுக்குகள் என இதழ் பன்முகத் தோற்றத்தோடு வெளிவந்துள்ளது.அந்தனி ஜீவா அவர்களால் மலையக மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகாக வெளிவரும் கலை, இலக்கியத் திங்களிதழ். Anthony Jeeva. P.B.No.32. Kandy. Sri Lanka.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,