மலேசிய மண்ணிலிருந்து வெளிவருகிற தமிழ் இதழ். ஆசிரியர் கா. ஆறுமும்,, மலேசியா கோலாலம்பூரிலிருந்து வெளிவருகிறது. மின்னஞ்சல் semparuthi@gmail.com - அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாறினாலும் - மக்களின் பிரச்சனைகள் தீராது - அடித்தட்டு மக்கள் - உழைப்பவர்கள் பசிக் கொடுமையிலேயே நிரந்தரமாக இருப்பார்கள் - அவர்களை ஏமாற்றி கொழுக்கும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் - பெயர் மாற்றும் - தலைப்பை மாற்றும் - போலயைக் காட்டும் - இந்தச் சூழல் மக்கள் நாயக ஆட்சிக்கு இட்ட சாவம். இந்நிலையைில் எப்படி மாற்றம் கொண்டு வருவது என்பதை ஆசிரியர் தலையங்கத்தில் கூறுகிறார், ----- நமக்கு இது ஓர் இக்கட்டான நிலை, புதிய அரசியல் மாற்றம், அதைப் பயனுள்ள வகையில் அமைக்க வலுவில்லாத சமூக அமைப்பு முறையும் ஒற்றுமையின்மையும், ஆனால் இது போன்ற காரணங்களைக் காட்டி நம்மை நாமே பின்னடைவு செய்யவும் இயலாது. இந்தக் கட்டத்தில் வாழந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் நினைத்தால், ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும், நமக்குத் தேவை ஒரு பத்தாண்டுகள் போதும், உறுதியான கொள்கைள், திறமையான தலைமைத்துவம், தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட மனப்பக்குவம், பத்தே ஆண்டுகளில் மேம்படுவோம் என்ற நம்பிக்கையைக் கொண்ட மக்கள் கூட்டமாக நாம் மாறினால் வரலாற்றை மாற்றி எழுத முடியும் -

அருமையான சிந்தனை. இதற்கு அடிப்படையாகச் செய்ய வேண்டியது என்ன ???

1. எளிய, செலவில்லாத, அனைவருக்குமான, தரமான, மாணவர்களிடம் நுட்பம் ஊக்குகிற, இயல்பான, தமிழியம் சார்ந்த அடிப்படைக் கல்வி - மரத்தடியில் நடந்தாலும் - வீர மரவர்களாக மாற்றுகிற உயரிய அடிப்படை செயற்பாடு - மொழி, அறிவியல், கணிதம், வரலாறு என்கிற அடிப்படைகளை ஆழமாகக் கற்றுத்தருகிற - படிநிலையிலில்லாத - (வகுப்பு - ஆண்டு - வெற்றி தோல்வி - எனச் சுருங்காத) - புதிய நோக்கில் அமைந்த அடிப்படைக் கல்வி - (நமக்கான கல்வியை நாம் தான் ஆக்க வேண்டும்) (அகவை 3 முதல் 16 வரை)

2. அகவை 20 முதல் 45 வரை - அனைவருக்குமான சோர்வில்லாத - பொருண்மிய வளர்ச்சி - மற்றும் சேமிப்புடன் கூடிய தொடர் உழைப்பு ( அடிப்படையான வேளாண்மையிலிருந்து - உயர் தொழில் நுட்பம் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய பொருண்மிய மேம்பாட்டுச் செயல்கள் ) சேமிப்பும் - உயர்வும்,

3. அகவை 20 முதல் 45 வரை - அனைவரையும் - திசை திருப்புகிற, மயக்கச் செயற்பாடுகளை பத்து ஆண்டுகளுக்கு ஒதுக்கி வைத்தல் - புகைத்தலிலிருந்து - மது, மங்கை, பொழுதுபோக்கு, பந்தையம், பரிசுச்சீட்டு, திடீர் பணக்கானாகிற முயற்சி - என்கிற மயக்கச் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்தல் - ஒவ்வொரு மனிதனாக, ஒவ்வொரு குடும்பமாக, இதனை ஆணையாக எடுத்துச் செயற்படுத்துதல்.

4. அகவை 46 முதல் 60 வரையுள்ளவர்கள் - தாங்கள் பெற்ற பட்டறிவின் - பயன்பாடுகளை, உயர்தன்மையை - பதிவு செய்து - குழுக்களாகச் சிந்தித்து - தரமானவற்றை - வரிசைப்படுத்தி - இளைஞர்கள் இயங்க உதவுதல் - தூண்டுகோலாக இருத்தல்

ஓராண்டிற்கு இதனைச் செயற்படுத்த வேண்டும்........மலேசிய மண்ணிலிருந்து தமிழின எழுச்சிக்காக வெளிவருகிற திங்களிதழ். ஆசிரியர் உரை: நமது உரிமைகளுக்காக உணர்வோடு வாக்களிப்போம், இந்தியர் வாக்குகளால் ஊசலாடும் தொகுதிகள், அதே ராகம் அதே பல்லவி பாடகரை மாற்ற ஏற்ற நேரமா இது? முடிந்தால் இசைக்குழுவை மாற்றலாம். ஓட்டுப்போடுவோம் வாரீர், தமிழ்ப் பள்ளிகளுக்காக இன்ட்ராப் நிதி வசூல் செய்தனரா? நம்பிக்கையை வளப்படுத்தும் கிளந்தான் மாநில அரசு, ரோஜா மலர்கள் வழங்கும் திட்டம், டத்தோ சாமிவேலுக்கு இந்தியர்கள் மேல் ஏற்பட்ட அக்கறை, மஇகா வேட்பாளர்கள் தாக்குப் பிடிப்பார்களா? மலேசிய இந்திய காங்கிரஸ், புரியாத புதிர், மஇகா நாடாளுமன்ற வேட்பாளர்கள் வெற்றிபெற இந்தியர்களின் வாக்குகள் அவசியமா? அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கம் நிதி வழங்க மறுப்பதால் தமிழ்ப் பள்ளிகள் தாழ்ந்து நிற்கின்றன. திருகு தாளத்திற்கு ஓர் எல்லை இல்லையோ முருகா, வாக்கு எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வுள்ள தொகுதிகள் சமமானவையா? தமிழ்ப் பள்ளிகள் எப்போது அரசுப் பள்ளிகளாகும், பொய்முகம், மலேசியாவில் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை, பத்தாண்டு வரலாற்றுப் பதிவில் செம்பருத்தி, அனைத்து அதிகாரங்களும் அம்னோவிடமே. ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனங்கள். போர் நிறுத்த உடன்பாட்டின் முறிவும் ஈழப் போரின் இன்றைய பரிமாணமும். இந்தியர்கள் நாலாந்தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள். - இப்படி 64 பக்கங்களில் தரமான அச்சு இதழாக இதழ் வெளிவந்துள்ளது.மலேசியாவிலிருந்து வெளிவரும் திங்களிதழ். இந்த இதழில் மக்கள் மனம் வென்ற சுப.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. மலேசியாவில் தமிழ்ப் பள்ளி மாணவர்களை அலைக்கழிக்கும் 7A தரம் பெறுதல் என்ற கட்டுரை, எப்படியாவது படிக்க வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் - அப்பொழுது தான் மேலெழ முடியும் என்ற மாயைக் காட்டி மாணவர்களை அச்சப்படுத்துவதை கட்டுரையாளர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பள்ளிக்கு மாணவர்கள் தேவை என்ற பின்பக்க - உள் அட்டையின் குறிப்பு - நம்மைத் தலைகுனிய வைக்கிறது - தமிழர்கள் தமிழ்ப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் - அதுவும் தொடக்க நிலைகளில் தாய்மொழி வழித்தான் படிக்கவைக்க வேண்டும் என்று எண்ணுகிற தமிழனை எண்ண வேண்டும் போலிருக்கிறது. இங்கும் சரி. அங்கும் சரி. மற்ற மொழிகள் படிக்கட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை - 5 ஆம் வகுப்பிற்கு மேல் எததனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம். அப்பொழுதுதான் ஆற்றல் இருக்கும். சிந்தனையாளர்கள் வருவார்கள். படைப்பாளிகள் வருவார்கள். விஞ்ஞானிகள் வருவார்கள் - என்ற அறிவுத் தெளிவை எப்படி நம் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்துவது. இது மிகப் பெரிய சவால். இதனை நாம் செய்ய வேண்டும். 365 பள்ளிகள் இருந்தது 150 பள்ளிகளாகக் குறைந்ததே வருந்துதற்குரியது.( நம் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி தமிழில் வேண்டும் - அதுவும் ஆற்றலை ஆக்குகிற - தரமான - அறிவியில் நுட்பமுடைய - துணிவு - தன்னம்பிக்கை ஆக்குகிற குழந்தை உளவியல் வழியில் அமைந்த பாடத்திட்டம் - தரமான பாடத்திட்டம் - வழி செயற்படுத்த வேண்டும் )மலேசிய மண்ணில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும். அவர்களுக்கான விழிப்புணர்வையும் ஊக்குகிற இதழ் இது. மலேசியாவில் குறைந்து வரும் தமிழ்ப் பள்ளிகள் பற்றியும், இதனைக் கண்டு கொள்ளாத மலேசிய அரசு பற்றியும் சான்றாதாரங்களுடன் இதழில் விளக்கி வருகிறது. இந்த இதழில் சிறார்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிகளை சமூக மேம்பாட்டு மையங்களாக உருவாக்குதல் ஒரு கண்ணோட்டம் என்ற கட்டுரை - தமிழ் மக்களிடையே தமிழ்ப் பள்ளிகளின் மீது ஆர்வத்தையும், பாதுகாக்க வேண்டும் என்ற வேகத்தையும் உருவாக்கும் என்று நம்புகிறோம், இது தொடர வேண்டும். ஆவணம் தேடி என்று மலேசிய மண்ணில் கால்பதித்து வாழ்ந்து வருகிற தமிழ் மக்கள் பற்றிய தொடர் வரலாறு காட்டுகிற அரிய தொடர்.மலேசியா, மலேசியாவில் வாழும் தமிழர்களது உண்மை நிலையைச் சுட்டிக்காட்டுகிற இதழ். ஆவணம் தேடி என்ற பகுதி தமிழ் மக்களது மலேசிய வரவும் அவர்களது வாழ்நிலையையும் வரலாற்று அடிப்படையில் சுட்டிக் காட்டுகிற அருமையான பகுதி. உலகளாவிய தமிழர்களது பார்வையைச் சுட்டிக் காட்டி, எப்படித் தமிழன் மேலெழ வேண்டும் என்பதை வழிநடத்துகிற இதழ் இது.செம்பருத்தி மலேசிய மண்ணில் வாழுகிற தமிழர்களது பிரச்சனைகளை முன்னெடுத்துக் காட்டுகிற இதழ். தமிழ்க் கல்வியையும், தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் பற்றி குறிப்பிட்டு வழிநடத்துகிற இதழ். வரலாற்று உண்மைகளைக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வேற்றுகிற இதழ். இந்த இதழில் மாணவர்கள் அறிவுத்திறனைப் பெற ஆசிரியர்கள் ஈக உணர்வுடன் செயல்படவேண்டும் என்ற கட்டுரை மிகச் சரியானதே. ஒரு நாட்டினுடைய அறிவும் ஆற்றலும் தொடக்கக் கல்வியை ஒழுங்காக அமைப்பதில்தான் இருக்கிறது. வெள்ளப்பிரச்சனை பற்றிய குறிப்புகளும் இதழில் உள்ளன. உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியா என்ற கட்டுரை சிந்திக்க வைக்கிறது. இதே நிலைதான் எங்கும் உள்ளதா? எப்படி இதனை வென்றெடுப்பது என்ற சிந்தனையே மேலெழுகிறது. காசி ஆனந்தன் அவர்களின் இன்றும் கவிதை சரியானதே. இன்றும் செருப்புத் தைப்பவன் ஆளமுடியாததைக் காட்டுகிறது. இடதுகைப் பெருவிரல் ரேகைச் சான்றோடு கையில் எழுதிய அடையாள அட்டையை வைத்துக் கொள்ள வலியுறுத்தியதை இதழின் ஆவணப்பகுதி வழி அறிய முடிகிறது. அன்னை பூபதி பற்றிய கட்டுரை, மற்றும் விடுதலைக்காகப் பெண்கள் போராட வேண்டும் என்ற கட்டுரை எழுச்சியூட்டுபவையாக உள்ளன.தொடக்கக் கல்வி ஓர் அடிப்படை உரினை என்கிற ஐ.நர். ஆய்வாளர், புதுமுக வகுப்பு தேவையா, பழைய உலோக வியாபாரமும் களங்கமும், திறனாய்வுக்கலை இன்னும் வளரவில்லையா - என்கிற கட்டுரைகளும் அருண் கிள்ளான் எழுகிற தொடர்களும் இதழில் உள்ளன. கடந்த ஆண்டு மலேசியாவின் மொத்த வணிகம் ஒரு லட்சங்கோடியை (ஒரு திரிலியன்) தாண்டிவிட்ட போதும், மலேசிய மண்ணில் வாழுகிற இந்திய மக்களின் நிலை இன்னம் மாறவில்லை, தமிழர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது என்கிற கட்டுரை உண்மைநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆவணம் ஓர் ஆலின்வேர் தேடி என்கிற தொடர் - மலேசிய மண்ணில் கால்பதித்து மண்ணை வளமாக்கிய நம் மக்களுக்கான வரலாற்றுத் தேடலே. சான்றாதரங்களோடு திரட்டப்படுகிற இந்த ஆவணங்கள் வாழ்ந்த மக்களின் வரலாறு காட்டும். மொழியின் முகங்கள் என்ற பகுதியில் அருண், கிள்ளான் எழுதியுள்ள கட்டுரை தமிழர்களுக்கு உணர்வேற்றுவதே. சினிமா மாயையில் மூழ்கியுள்ள நம் தமிழர்களுக்கு சினிமாக்கலைஞர்கள் எப்படி காசுதிரட்டும் வேட்டைக்காடாகத் தமிழகத்தில் வாழ்ந்து, தன் சொந்த நாட்டுக்குச் செல்லும் பொழுது எப்படி தமிழருக்கு எதிரியாகமாறி இயங்குகிறார்கள் என்பதையும் நுட்பமாகக் காட்டுகிறது. இனியாவது தமிழர்கள் விழிப்படைவார்களா. உலகநாடுகளில் தமிழர்கள் பரவியுள்ள எண்ணிக்கையை காட்டுகிற தொடர் பாதுகாக்கப்படவேண்டியதே.மலேசியாவிலிருந்து வெளிவருகிற திங்களிதழ். சனவரி 2007 இதழ். இதழின் அட்டையில் பாலசிங்கத்திற்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளது. இதழின் தலையங்கத்தில் கல்வியை ஜனநாயகப் படுத்துவோம் என்ற கருத்தினை எழுதியுள்ளது. பொங்கல் விழா பற்றி எழுதியுள்ளது. உடைபடும் கோட்பாடுகள் என உடைக்கப்படுகிற கோவில்களைப் பட்டியலிட்டு தமிழர்கள் சிதைக்கப்படுவதைக் காட்டுகிறது. மைக்கா ஹோல்டிங்ஸ் பற்றிய உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. டோல் கட்டண உயர்வு நியாயமானதா என வினாவெழுப்பி - அதிலுள்ள வணிகக் கொள்ளையைச் சுட்டிக் காட்டுகிறது. பாலசிங்கத்தின் மறைவால் ஒடுங்கிவிடாது தேசத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் எனக் காட்டியுள்ளது. காசி ஆனந்தனின் நறுக்குகள் கவிதை நூலை ஆங்கிலத்தில் கண்டபொழுது நெஞ்சு நிமிர்கிறது. மாணவர்களின் உண்மை நிலையைக் காட்டி எப்படி சரிசெய்வது எனக் கூறியுள்ளது. இதழில் உரைவீச்சுகளும், குறிப்புகளும் உள்ளன.விடுதலைப் பாதையின் அழியாத தடங்கள் என வீரவணக்கம் செய்யும் தமிழினியின் கட்டுரை தமிழீழத்தில் நடைபெறுகிற இன ஒடுக்குதலைச் சுட்டிக் காட்டுகிறது. 8 ஆவது மலேசியத் திட்டத்தில் 21 பள்ளிகளும், 9 ஆவது மலேசியத் திட்டத்தில் 14 பள்ளிகளுமே இருப்பதை கா.ஆறுமுகத்தின் கட்டுரை காட்டுகிறது. ஏன் இந்த நிலை? பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இல்லையா? அல்லது தமிழ் மக்கள் தமிழ் படிக்க விரும்புவதில்லையா? அப்படியானால் தமிழ் கற்பித்தலை எளிமைப் படுத்தி தமிழ் மக்களும், விரும்புகிற அனைவரும் கற்றுக் கொள்ள வழிகாட்ட வேண்டியது நமது கடமை யல்லவா? இது பற்றிக் கட்டுரையாளர் சிந்திக்கவும். உதவத் தமிழம் வலை காத்திருக்கிறது. மூன்றாம் படிவக் குடியுரிமைப் பாடத்தில் குறிப்பிட்டிருந்த கருத்துருக்கள் எதைக் காட்டுகின்றன? நமக்கான பாடத்திட்டங்களை நாமே வடிவமைத்தால்தான் விடிவு வரும். இல்லையென்றால் அடிமை வாழ்வுதான் தொடரும். இது வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பொருந்தும். இதழிலுள்ள தமிழ் அறவாரியத்தின் வெற்றியாளர் நாள் பற்றிய செய்தி வாழ்த்துதற்குரியதே. பிடல் கேஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்காவின் 638 சதிகள், ராவ்பகதூர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை - கட்டுரைகள் சிறப்பானதே.இந்த இதழில் ஒன்பதாவது மலேசியத் திட்டமும் ஒதுக்கப்பட்ட இந்தியர்களும் என்று இந்தியர்கின் தேவையை எடுத்தியம்புகிறது. தி.க.சி. பற்றிய செய்தி அறிஞர்கள் வரிசையிலே பகுதியில் உள்ளது. இராணவத்தீர்வில் நம்பிக்கை கொண்டுள்ள சிங்களத் தலைமை பற்றி கட்டுரையாக்கியுள்ளது. உறங்காத நினைவுகள் சிறுகதையும் உள்ளது. மேலும் தொடர்களான அன்று கண்ணகி இன்று காளியம்மாள், மொழியின் முகங்கள், முல்லையில் நடந்த ஆழிப்பேரலை, ஆவணம் ஓர் ஆலின் வேர் தேடி - படைப்புகளும் இதழில் உள்ளன. தமிழ் மண்ணே வணக்கம் என விவசாயத்தின் நுட்பத்தைக் காட்டுகிறது.செம்பருத்தி : இந்த இதழில் ஆதிகுமணன் மறைவு குறித்தும், அறிவு மதியின் நூல் வெளியீடு குறித்தும் வெளியிட்டுள்ளது.செம்பருத்தி : தரமான கவிதை, கட்டுரைகளுடன் மண்மீட்புக்காகக் கருத்து விதைக்கிற தரமான இதழ்செம்பருத்தி : தரமான கவிதை, கட்டுரைகளுடன் மண்மீட்புக்காகக் கருத்து விதைக்கிற தரமான இதழ்.தமிழேடு நடத்திப் பணம் ஈட்டும் சாரா, தமிழ் அழிவுக்குத் துணை போகிறாரா? நம் மாணவன் நமது சொத்து, ம.இ.கா வின் 59 ஆவது பேராளர் மாநாடு - எனத் தரமான கட்டுரைகளையும், முதலாம் விடிவெள்ளி தொடர் நாடகத்தையும், உ.வே.சா வை தமிழறிஞர்கள் தொடரிலும், மலேசியத் தொழிற்சங்கப் போராட்டம் பற்றியும் வெளியிட்டுள்ளது. நெருப்பு மனிதர்கள் எனக் கருப்பு ஜீலையையும், விழுதாகி வேருமாகி என்கிற (கேப்டன் வானதி பற்றிய) தரமான கவிதையையும் வெளியிட்டுள்ளது.பெருகிவிட்ட ஐந்தடிக் குடிசைகள்.., சீரழிகிற சென்னை? தாத்தா எவ்வழி, பேரன் அவ்வழி, பாவம் செம்மொழி , மே 1, முல்லையில் நடந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவங்கள், அரசின் ஊடகமும் புலிகளின் ஊடகமும் - எனத் தரமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் இதழில் எழுதுகிறது. தமிழ்ப் பெரும்புலவர் எனப் 17 தமிழறிஞர்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இதழில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதழில் வெளியாகியுள்ள இவனா தமிழன் உரைவீச்சு அருமையாக உள்ளது. முருகப்பெருமான் இறங்கி வந்து சமுதாயப்பணியில் ஈடுபட அழைக்கும் கட்டுரை எள்ளல் தொனியில் ஈர்ப்புடையதாக உள்ளதுமலேசியாவிலிருந்து வெளிவருகிற தமிழர் விழிப்புணர்வு இதழ்.சூன் 2005 இதழ். கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், துணுக்குச் செய்திகள் எனத் தருகிற அனைத்துமே, தரமாக தமிழ் உணர்வு மிக்கதாக சிறப்பாக வெளியிடுகிறது. இந்த இதழின் தலையங்கம் - முட்டாள் தமிழனே நீ எப்போது திருந்தப்போகிறாய் - என திரைபட மாயையில் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களை நோக்கி அறிவிப்பது உண்மைத் தன்மையது. (சுவைத்த பக்கங்கள் பகுதியில் உள்ளது) தமிழறிஞர் வரிசையில் இந்த இதழில் ந.சி.கந்தையாபிள்ளை அவர்களைப் பற்றி எழுதியுள்ளது. அறிவனின் பதில்கள் சிந்தித்கத் தூண்டுபவையே.மலேசியாவிலிருந்து வெளிவரும் இதழ். இரண்டகம் செய்யும் சிங்கள அரசு, கதறும் காடுகள், நிலத்தடி நீர் வறண்டது, விண்வெளியில் போராட்டம், சி.வை.தாமோதரம்பிள்ளை - என்கிற தலைப்புகளில் தரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இருண்ட வெளிகள், மொழியின் முகங்கள், பயங்கரவாதி யார்? போன்ற தொடர்களும், அரசியல், மக்கள் மன்றம், கவிச்சோலை, அறிவனின் பதில்கள், எண்ணம், சிந்தனை எனச் செறிவாக இதழைத் தொடர்ந்துள்ளது.தமிழ் அறவாரியத்தின் இரண்டாவது நட்புறவு விருந்து பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அறிஞர் வரிசையில் முனைவர் தமிழண்ணல் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. சாமிமூர்த்தியின் நேர்கோடுகள் சிறுகதை தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாடு பற்றிக் கூறுகிறது. வீ அருணாவின் சீரழிக்கும் சின்னத்திரைகள் பற்றிய கட்டுரை அனைவரும் படிக்கவேண்டிய தரமான, வழிநடத்துகிற கட்டுரையே. அனைத்தையும் சீரழிக்கிற, வீட்டுக்குள்ளே வந்து விதைக்கிற, அழிக்கிற நிலையை கட்டுரை மிகச் சிறப்பாகக் காட்டுகிறது. வானுயரப் பறக்கும் வன்முறைகள் பண்பாட்டுச் சீரழிவிற்கான சரியான பதிவுதான். முகவரி : Peti Surat 10915, Pejabat Pos Besar, 50728, Kuala Lumpur, Malaysia


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,