சித்திரை 1 இல் அமீரகத்திலிருந்து, தமிழியன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 38 பக்கங்களில் துவக்கு இதழ் வெளிவந்துள்ளது. தாய் நிலத்தைப்பிரிந்து எங்கோ வெகுதொலைவில் வாழ்ந்துவரும் அவர்களுக்கென ஓர் அடையாளம் தேவைப்பட்டபொழுது அது தமிழாக ஆனது. மதம் இனம் கடந்து தமிழ் மூலமாகவே மனநிறைவு அடையும் அவர்களது அமைப்புதான் துவக்கு. இதன் தொடர்பிதழ்தான் துவக்கு. கவிஞர் அறிவுமதி, தொல்.திருமாவளவன், அப்துல்ஜப்பார் ஆகியோரது வாழ்த்துதலில் இதழ் மலர்ந்துள்ளது. இதழ் - கவிதை, கட்டுரை, துணுக்கு எனத் தரமாக வெளிவந்துள்ளது.துபாயிலிருந்து வருகிற pdf இதழ். துவக்கு துபாயிலிருந்து வெளிவந்துள்ள இதழ். இது இரண்டாவது இதழ். தரமான விழிப்புணர்வுக் கருத்துகளைத திரட்டி, இலக்கியச் செறிவோடு வடிவமைத்து, PDF வடிவத்தில் நண்பர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் மினஅஞ்சல் வழி அனுப்பி வைக்கிற இதழ். 2k அளவுள்ள கோப்புகளாக அனுப்புவதால் படிப்பாளிகள் அதை வலையிறக்கிப் படிப்பார்களா என்பது வினாக்குறியே. இதனையே html வடிவில் ஆக்கி இணையதளத்தின் வழி பரவலாக்கும் பொழுது கூடுதல் பயன் கிடைக்கும் என்று நம்புகிறேன். நண்பர் இசாக் இதனைக் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டுகிறேன்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,