வடஅமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காகத் திங்கள்தோறும் வெளியிடப்படுகிற இதழ். ஏழாவது ஆண்டின் 11 ஆவது இதழ். இணைய முகவரி www.tamilonline.com வெளியிடுபவர் சி.கே.வெங்கட்ராமன், ஆசிரியர் மதுரபாரதி, இணைஆசிரியர்கள் டி.மதுசூதனன், அரவிந்த் சுவாமிநாதன், சிவக்குமார் நடராசன் - இதழ் சென்னை ஆன் லைன் மற்றும் ஆறாம்திணை - இணையதளங்களோடு தொடர்பு கொண்டுள்ளது. வழக்கமாக உரிய வழ வழ வண்ணத் தாளில் இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திங்களில் உள்ள படைப்பாக்கங்கள், தென்றல் பேசுகிறது, குறுக்கெழுத்துப் புதிர், மாயா பஜார், அன்புள்ள சிநேகிதியே, நலம் வாழ - சர்க்கரை குறைபாடு, சினிமா சினிமா, வழிபாடு சுசீந்திரம், கரியாலி நினைவலைகள், கதிரவனைக் கேளுங்கள், விளையாட்டு, நிகழ்வுகள் - என பல்சுவையாக செய்திகளை நேர்த்தியான அச்சமைப்பில் வெளியிட்டுள்ளது. பாவண்ணன் சிறுகதையும் உள்ளது. இளந்தென்றல் என சிறுவர்களின் படைப்புகள் இதழில் உள்ளன.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,