ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இலவசத் திங்களிதழ். ஆசிரியர் கலாநிதி.மு.க.சு.சிவகுமாரன். பிப்ரவரி 2006 இல் வெளியான இந்த இதழ் மணி 56 ஓசை 120 எனக் குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனி, கனடா, தாயகத்திற்கு இடையில் நட்புறவுப் பாலமாக, எழுத்துத் தொடர்புக் கருவியாக இதழ் வெளிவருகிறது. வண்ண அட்டையில் தரமான அச்சில் நிறைய விளம்பரங்களுடன் இதழ் வெளிவந்துள்ளது. இலவச இதழ் என்பதால் வணிகர்களை நிறைவு செய்யும் வகையில் இதழின் கூறுகள் அமைந்துள்ளன. இருந்தாலும் இதழின் இதழின் நோக்கு தமிழர்களின் நலம் காணும் போக்கில் அமைந்துள்ளது தெரிகிறது. புலம் பெயர்ந்தவர் மனவடுக்களை ஆய்வு செய்த முதற்தமிழ் பெண்மணி, நான் கண்காணிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கிறேன், கிச்சான் குறும்படம், பொங்கல் விழா நிகழ்வுகள், உலகக் கண்ணாடி போன்றவை சிறப்பான குறிப்புகளே.postfach 2765, 58477 Ludenscheid, Germany. email: vettimaniy@hotmail.comதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,