புதினம் - இலண்டனிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக வெளிவருவது. இந்த இதழ் 10 ஆவது ஆண்டு மலராக மலர்ந்துள்ளது. இதழாசிரியர் ஈ.கே. ராஜகோபால் ஆற்றலுள்ள இதழாசிரியராக இருந்து இதழைத் தொடர்ந்து வருவதை இதழ்வழிக் காணமுடிகிறது. பல வருட இதழியல் அனுபவத்தோடு புதினம் இதழ் 1994 இல் இலவச திங்களிருமுறை இதழாகத் தொடங்கப்பட்டது. "இலங்கையிலும் சரி, லண்டனிலும் சரி - எனக்குத் தெரிந்த துறையும் தொழிலும் இது ஒன்றுதான்" என ஆசரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளது - இதழியலில் ஆசிரியருக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இதழ் தொடர்ந்து வந்து கருத்துச் செறிவேற்ற வாழ்த்துகிறோம்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,