சீசெல்சு தமிழ் கலாச்சார வளர்ச்சி மையத்தின் இதழாக இந்த இதழ் காணப்படுகிறது. அலை 2 ஓசை 1 என்று இதழ் குறிப்பிட்டுள்ளது. த.பெ.எண் 93, சீசெல்சு - முகவரியிலிருந்து வெளிவருகிறது. தலைவர் கோ.சிவசண்முகம் பிள்ளை, செயலாளர் மு.புகழேந்தி, பொருளாளர் ஆ.கலியபெருமாள். இதழின் பிரசாந்தன் அவர்களுடனான நேர்காணல் காணப்படுகிறது. இதழில் வெளியாகியுள்ள இளம் மாணவர்களின் படைப்பாக்கத்திறனைக் கண்டபோது மனம் மகிழ்வடைகிறது. 12 பக்க இதழில் 2 பக்கங்களை சிறுவர்களுக்காக ஒதுக்கியுள்ளது வணங்குதற்குரியது. இலக்கியம் காட்டும் வாழ்வியல் என திருமேனி நாகராசன் எழுதியுள்ளார். உரைவீச்சுகளும் குறிப்புகளும் சிறப்பாகவே உள்ளன. மருத்துவர் வை.இராமதாஸ் அவர்களைப் பற்றியும், அவர் பெற்ற விருது பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது. ஆக்கம் Photographiv Touch. Deevas Arcade, p.o.box 285, Market street, Victoria எனக் குறிப்பிட்டுள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,