தமிழ். மஹிமை தங்கிய ஐந்தாவது ஜார்ஜ் பெருமான் இந்திய சக்ரவர்த்தியாக டில்லியில் முடிசூடின நன்னாளிற் றொடங்கியது. என்கிற அறிவிப்பைத் தலைப்பிலிட்டு, கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்கிற குறளையும் தலைப்பிலிட்டு 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் புத்தகம் 1 எண் 1 என்கிற வரிசை முறையில் தொடங்கப்பட்ட இதழ் இது. தமிழ் மொழியையும், கல்வி தொடர்பான செய்திகளையும் மக்களுக்குத் தருவதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் இது. பத்திரிகையின் ஆண்டுச் சந்தா தபாற்செலவு உள்பட ரூ 1 என அறிவித்து, தமிழபிமானிகளையும், கல்வியாளர்களையும் பத்திரிகைக்கு உதவ அன்போடு அழைக்கிறது. மூன்று இதழ்கள் கிடைத்துள்ளது. பத்திரிகையின் முன்னும் பின்னும் சிதைந்த நிலையில் உள்ளதால் வேறு செய்திகளை அறிய முடியவில்லை


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,