சற்குரு - 1915 இல் தனது முதலாம் ஆண்டின் ஏழாவது இதழை வெளியிட்டுள்ளது. இதழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கெனவே வெளிவந்தது. இதழில் தமிழ்ச் செய்திகளை முதன்மைப் படுத்தியும், கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்திகளை வரிசைப்படுத்தியும் வெளியிட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்ட செய்திகள், கற்பித்தல் முறைகள் தொடர்பான விளக்கங்கள், வெளிநாடுகளில் நடைபெறுகிற தொடக்கப்பள்ளிகள் - அதன் நடைமுறைகள் பற்றிய செய்திகள், கல்வி தொடர்பான துணுக்குச் செய்திகள், தமிழ் இலக்கியக் காட்சிகள் பற்றிய விவரிப்பு, வெளிவந்துள்ள நூல்கள் பற்றிய விமர்சனம் எனத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனாகுகிற வகையில் பல்வேறு நுட்பச் செய்திகளை உடைய தமிழ்ப் பத்திரிகை. ஆண்டு முழுவதுக்கமான இதழ்களுக்குத் தொடர் பக்க எண் குறிப்பிடும் முறையானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதழில் கணிதம், அறிவியல், சமூகவியல், குடிமையியல் என பாடங்களுக்கான சிறப்பான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. பல்வேறு தலைமையாசிரியர்கள் தங்களது கருத்துரைகளையும் எழுதியுள்ளனர். C.Kofel, Superintendent, Alcott Panchama Free Schools, Adyar மாண்டிசேரி முறை பற்றி எழுதியுள்ளார். பரிமணப்பல்லவராயர் இதழின் பல பக்கங்களில் கருத்துரைத்துள்ளார். இதழ் சென்னையில் அச்சாகி வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,