கல்ப தரு - 1917 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை அறிவு வளர்ச்சிக்கான வாராந்திரத் தமிழ் பத்திரிகை எனத் தலைப்பிலிட்டுத் தொடங்கப்பட்ட இதழிது.

பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக்
காரார் கற்பதரு வேனும்பேர் கவினும்வார பத்திரிகை
ஆராவமுத மாயுலவி யவனி விளங்கு மாறருளச்
சீரார் ஞான குரவான சேனை முதலி தாள் பணிவாம்.

எனக் காப்புச் செய்யுளை எழுதி இதழைத் தொடங்கியுள்ளது. தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், கல்வி, செய்தி, எனப் பல்சுவைகளை உள்ளடக்கிய இதழிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,