செந்தமிழ் - இதழ் வெளிவந்த ஆண்டு - 1921

ஈரோடு திருமிகு திருவேங்கடம் பிள்ளை அவர்களது நூலகத்திலிருந்து பெற்ற இதழ்த் தொகுப்பு இது.

பதிப்பு 1921. மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து மாதந்தோறும் வெளிவந்த இதழ் இது. இது இருபதாம் தொகுதி.இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த 12 இதழ்களைத் தொகுப்பாக்கித் தரமாகக் கட்டகம் செய்து விற்பனை செய்துள்ளது, இதனால் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இதழ் கெடாமல் இருக்கிறது. இது மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு. பத்திராதிபர் திரு,நாராயணையங்கார். இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் புன்னைவன நாத முதலியார் எழுதியுள்ள அசதிக் கோவை முதல், நாராயண சுவாமி ஐயர் எழுதிய சமசுக்கிருத விருந்த மஞ்சரி வரை இடம் பெற்றுள்ளது. இதில் சீனிவாசப் பிள்ளை எழுதியுள்ள தமிழ் வரலாறு பகுதி 1 இல் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,