குமார விகடன் : மாலை1 மலர் 10 குமார விகடன் இதழ் இது.1934 ஜனவரி 15 ஆம் தேதி வெளிவந்துள்ளது. "உலகத்தார்க் கின்பநல மூட்டிடலே எஞ்ஞான்றும் உலகங் களிக்க உற்றேன் பராபரமே" எனத் தலைப்பிலிட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த இதழிது.

மக்களை ஈர்க்கிற வகையில் இதழை நடத்தியுள்ளது. தமாஷ், சிறுகதை, நாடகம், கார்டூன் படங்கள், விகட விளம்பரங்கள், ஒரு காமுகனின் தினக்குறிப்பிலிருந்து, சங்கீத மாநாடு, சரசாவின் தியாகம் என பெரியவர்களை ஈர்ப்பதோடு, சிறுவர்களுக்காகவும் குட்டியானையும் குள்ளநரியும் எனப் படக்கதையும் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்: சாமி, துணை ஆசிரியர்கள் ச.து.சுப்பிரமணியம், ம.க.தணிகாசலம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,