1936 களில் சென்னையிலிருந்து டி.டி.சாமி அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரஇதழ். ஏழை யென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில், இழிவுகொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே என்ற பாடல் வரிகளையும், என்று தணியுமிந்த சுதந்திரதாகம்? என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்? என்ற பாடல் வரிகளையும் தலைப்பிலிட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு இதழிலும் வேறு வேறு பாடல் வரிகளைத் தலைப்பிலிட்டுத் தொடர்ந்துள்ளது. தனிப்பிரதி விலை அரையணா, வருட சந்தா மூன்று ரூபாய் எட்டணா, பர்மாவிற்கு முக்காலணா, இலங்கை 5 சதம் என விலையிட்டுள்ளது. இதழில் பல்வேறு துணுக்குச் செய்திகளை இணைத்துள்ளது. நாட்டு நடப்பையும் காட்டுகிறது. புதிய செய்திகளாக வியப்பூட்டும் செய்திகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.ஜி பெருங்காய விளம்பரம் இதழில் தொடாந்துள்ளது. கலகம் செய்பவர்கள், சுதந்திரத்திற்காக செய்யப்படுகிற செயற்பாடுகள், காந்தி பற்றிய குறிப்பு, என பல்சுவையாக இதழை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,