குடியரசு - பெரியர் நடத்திய பகுத்தறிவு இதழ். ஆசிரியர் - இ.வெ.கிருஷ்ணசாமி. ஞாயிறு தோறும் வெளிவரும் என்ற அறிவிப்புடன் 20-11-38 அன்று ஈரோட்டிலிருந்து வெளியான இதழ் இது. உள்நாட்டு வருட சந்தா ரூ3. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிற முகப்புக் குரலுடன் வெளியிட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம். பகுத்தறிவு, அரசியல் விழிப்புணர்வு என்கிற கருத்துகளை முன்னெடுத்துத் தொடர்ந்துள்ள இதழ் இது. இதன் அட்டை பச்சை வண்ணத்தில் உள்ளது. பச்சை அட்டை குடியரசு மக்கள் மத்தியில் அதிக ஈடுபாட்டுடன் படிக்கப்பட்ட இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,