1939 களில் ஆசிரியர் க.நா.சுப்பிரமணியம் துணை ஆசிரியர் கி.ரா அவர்களது உதவியுடன் சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். 18 இதழ்களை வெளியிட்டுள்ளது. இதழின் புகைப்படங்கள் தரமான தாளில் உயர் தரத்துடன் அச்சாகியுள்ளது. கு.ப.ரா., சாலிவாகணன், கே.சீனிவாசன், இலங்கையர்கோன், சி.சு.செல்லப்பா, கே. பரமசிவம், வாசுகி என இலக்கியத் தரமாகப் பேசப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு இதழ் வெளிவந்துள்ளது. படத்திலுள்ளது இதழ் எண் 9. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் வெளிவந்த இதழ். சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. ஆயகலை எனத் திரைப்பட விமர்சனமும் செய்துள்ளது. திரைப்பட விளம்பரமும், திரை நடிகையர்களின் புகைப்படங்களும் இதழில் வெளிவந்துள்ளது. இந்த இதழின் பின் அட்டையில் சாந்த சக்குபாய் திரைப்பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,