நந்தவனம் : பதிப்பாசிரியை : வை.மு.கோதைநாயகி.

தாரண வருடம் ஆடிமாதம் ஜகன்மோகினி பிரசுரத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டு, மகளிருக்காக வெளிவந்த இருமாத இதழ். இது நந்தவனத்தின் இரண்டாவது இதழ். "திறமையுள்ள சகோதரிகள் எழுத்துலகில் வெற்றி பெறவேண்டும்" என்பதை இலக்காகக் கொண்டு சிங்கப்பெருமாள் கோயில் ஜகன்மோகினி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது இதழ் 25 பெண்களின் படைப்புகளைத் தாங்கி 112 பக்கங்களில் வெளிவந்துள்ளது. அனுபவம், கற்பனை, நகைச்சுவை, சிறுகதை, சரித்திரக் கதை, நாடகம், பாடல், உள்ளத்துடிப்பு, அந்தரங்கம், ஆராய்ச்சி, உண்மைச் சித்திரம் எனப்பல தலைப்புகளில் படைப்புகளை வெளியிட்டுள்ளது. புதிய பெண் படைப்பாளிகளை ஊக்குவித்து அச்சாக்கியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,