தமிழ் ஹரிஜன் : ஏப்ரல் 13 1947 - இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - பொ.திரிகூடசுந்தரம் ஆசிரியர்களாக இருந்து நடத்தப்பட்ட விடுதலைப் போராட்ட இதழ் இது.

மகாத்மா காந்தியடிகளின் வாரப்பத்திரிகை என்று தலைப்பிலிட்டு தமிழ்ப் பண்ணை வெளியீடாக ஒவ்வொரு வாரமும் சென்னையிலிருந்து தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு இதழும் குறைந்தது 8 பக்கங்களுடன் முழு வெள்ளைத்தாள் அளவில் உள்ளது. விலை 2 அணா. காந்தியடிகளின் கருத்துகளையும் அவரது தொடர்ச்சியான செயற்பாடுகளையும் இதழில் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கத்தின் கீழும் " தண்ணீரில் வாழ்ந்து கொண்டு மீனோடு விரோதம் செய்ய முடியுமா? பாபம் செய்பவன் மனிதன் - பாபத்திற்காக வருந்துபவன் ஞானி - பாபத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான் - புல்லர்" என்பன போன்ற கருத்து வரிகளையும் குறிப்பிட்டுள்ளது. ( இதழ் உதவி திரு S.வேலுச்சாமி, காளிவேலம்பட்டி, பல்லடம் )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,