தாய்நாடு - 1947 டிசம்பரில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இது ஏழாவது ஆண்டின் இறுதி இதழ். ஆசிரியர். க.நாராயணன். புதுக்கோட்டையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. அட்டையிலுள்ளவர் விஜயலட்சுமி பண்டிட்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை கா.மு.ஷெரீப் இந்த இதழில் எழுதியுள்ளார். பொன்னரசியின் காதல் என்ற சரித்திரத் தொடர்கதை இதழில் வெளிவந்துள்ளது. மதிப்புரை பகுதியில் கீழ்க்காணும் இதழ்களின் முகவரியை வெளியிட்டுள்ளது.

1.குரல் - மாதம் ஒரு புத்தகம், மக்கள் மன்றம், பாலக்கரை, திருச்சி விலை 5 அணா.
2.வெண்மதி - பெண்களின் மாதப் பத்திரிகை. ஆசிரியை டாக்டர் டி.எஸ்.ராஜலட்சுமி அம்மாள், 103 அரண்மனைக்காரத் தெரு, சென்னை விலை 6 அணா.
3.மின்னல் - மாதப்பத்திரிகை. ஆசிரியர். எம்.ஆர்.எஸ்.மணி, திருச்சி. விலை 4 அணா.
4. தேசபந்து - மாதப்பத்திரிகை. ஆசிரியர். டி.ஆர். தாஸ், திருச்சி. விலை 4 அணா.
5. செந்தமிழ்ச் செல்வி - மாதப்பத்திரிகை.6.பவழக்காரத் தெரு. சென்னை.
6. வியாபாரம் - ஆசிரியர் எஸ்.சுப்பையா. வாரப்பத்திரிகை, 115ஈ மெளபகிஸ்ரோடு, இராயப்பேட்டை, சென்னை.
7. முன்னணி - வார வெளியிடு. ஆசிரியர். கே.எஸ.நாதன், 85 ஹைஸ்ரீட், கோலாலம்பூர்.
தீபாவளி மலர்கள்
1. சாட்டை ஆசிரியர் கணன், 53 குப்புமுத்து முதலி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை
2. சிவாஜி - விலை ரூ2, ஆசிரியர் திருலோக சீத்தாராம், திருச்சி.
3. பாப்பா - விலை 1-8-0 ஆசிரியர் ராமதியாகராஜன், ராயவரம்.
4.பாலர் மலர் - விலை ரூ1, ஆசிரியர் வி.எஸ்.நடேசன், புதுக்கோட்டை.
5.லோக சக்தி - விலை 8 அணா, ஆசிரியர். ம,கி,திருவேங்கடம், 35.பந்தர் தெரு, சென்னை.
6. மூவிடோ நியூஸ் - விலை 8 அணா, ஆசிரியர் டி,டி, சிவபுண்ணியம், திருச்சி.
7.இந்தியத்தாய் - விலை 8 அணா. ஆசிரியர். ஆர்.ஆனந்தராவ், மதுரை.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,