தமிழ்த் தென்றல் : வே.வ. இராமசாமி அவர்களால் விருதுநகரிலிருந்து வெளியிடப்பட்ட இதழ் இது. முத்தமிழ்ச் சித்திர மலர் என்று அறிவித்து வெளியிட்ட முதலாமாண்டு மலர் இது. 204 பக்கங்களில் தரமாக வெளியிட்டுள்ளது.

" காதொளிரும் குண்டலமும் கைக்கு வலை யாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந் தாமணியும் மெல்லிடையின் மேகலையும் சிலம்பு ஆர் இன்பப்
போதொளிர்பூந் தாளினையும் பொன்முடி சூ ளாமணியும் பொளியச் சூடி
நீதியொளிச் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க " என்கிற

சுத்தானந்த பாரதியாரின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கி ஜி.சுப்பிரமணியப்பிள்ளை, ஞான சவுந்தரி, திருக்குறள் அவதானியார், தெ.பொ.மீ, டி.கே.சி, கி.ஆ.பெ, ரா.பி.சேதுப்பிள்ளை, பெரியர், டிகே.சண்முகம், கோவைக்கிழார் போன்ற தரமான தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளோடு மலர் வந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ் எண்களையே வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,