காதம்பரி : 1948 மார்ச்சு மாதம் தொடங்கப்பட்ட சிறந்த நாவல் மாசிகை இது. இது முதல் இதழ். ஏ.கே. ஜெயராமன் ஆசிரியராக இருந்து சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ் இது. முதல் இதழ் அமரர் கு.ப.ரா வின் நினைவுச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

இதழின் அட்டையில் வரலாற்றுச் சிறப்புடைய நாவல்களின் நிகழ்வுப் படங்களை வண்ணத்தில் சிறப்பாக வெளியிட்டுள்ளது. முதல் இதழில் கவிதைக் கதை (மகாகவி ரவீந்திரரின் கடைசித்தாமரை), கட்டுரை (எம்.எஸ்.ராந்தவா எழுதியுள்ள காவியம் போற்றும் மலர்கள்), நாவல் (கா.ஸ்ரீ.ஸ்ரீ எழுதியுள்ள காமபானம்), நாடகம் (உமாசந்திரன் எழுதிய பெற்ற மனம்), தொடர் நாவல் (ரா.ஆறுமுகம் எழுதியுள்ள பொன்வண்டு) எனச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதழில் தி.ஜாவின் தேவதரிசனம் டட்ரக் கதையும் உள்ளது.( இதழ் கொடுத்து உதவிய திரு.வல்லிக்கண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல)


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,