1950 களில் சென்னை 10, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் ஹாஸ்டல் ரோட்டிலிருந்து இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழ் இரண்டாவது ஆண்டின் ஆறாவது இதழ். இதழில் இலங்கையிலிருந்து வெளிவரும் ஆத்ம ஜோதி அரிய செந்தமிழ் மாதப் பத்திரிகை பற்றிய விளம்பரக் குறிப்பு காணப்படுகிறது. கிரீடம் முத்திரை உள்ள அலுமினிய பாத்திர வணிக விளம்பரம் இதழில் உள்ளது. ஜூபிடரின் விஜயகுமாரி சினிமா விளம்பரமும் இதழில் உள்ளது. திருப்புகழ்மணி, வித்வான், வெங்கட்ராமன், பாலாம்பிகை, மு.ஜானகி, ராகவாச்சாரி, ராஜலட்சுமி, மங்களம், ஜயலட்சுமி நரசிம்மன், சுலோசனா பட்டாபிராமன், சுகுணா, அம்மு, பார்வதி, பிரேமசுந்தரி ஆகியோரது படைப்புகள் இந்த இதழிலுள்ளன. படைப்புகள் செறிவாக உள்ளன. சிறுகதை, கட்டுரை, நடப்பியல் என அனைவரும் விரும்புகிற வகையில் படைப்புகளைத் தொகுத்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,