விடிவெள்ளி. 1951 இல் சென்னையிலிருந்து இரண்டணா விலையில் தொடங்கப்பட்ட புதுமை வார இதழ். சரஸ்வதி இதழாளர் விஜயபாஸ்கரன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். இந்த இதழில் புதுமைப்பித்தன், மார்க்ஸிம் கார்க்கி, பற்றிய குறிப்புரைகளும், செய்திகளும், கதை, நாடகம் எனச் சுவையான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஈட்டி முனை என்று சுட்டிக்காட்டுவது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. புதுமைப் பித்தன் பேசினார் என்று தொ.மு.சி ரகுநாதன் எழுதியுள்ள கட்டுரை சிறப்பாக இருக்கிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,