திருவள்ளுவர் - ஆசிரியர் : எம். எஸ். இராஜரத்தினம் பிள்ளை. 3.சின்னக்கடைத்தெரு, திருச்சியிலிருந்து பதிவுபெற்ற மாத இதழாக வெளிவந்துள்ளது. படத்திலுள்ளது நவம்பர் 1952 இதழ். (மூன்றாம் ஆண்டின் இரண்டாவது இதழ்) சிவாஜி அச்சுக்கூடத்தில் அச்சாகி வெளிவந்தது. திருக்குறள் நுண்பொருள் விளக்கம் (அ.வரதநஞ்சயனார்), தாங்கலும் கிடத்தலும் (சுப்பிரமணியபிள்ளை), நாடும் சமுதாயமும் (தெ.போ.மீ), பிறவியும் விளையும் (ச.மு.பிள்ளை), தொடை விடையாடல், வ.உ.சி.கண்ட வள்ளுவர், வள்ளவர் வாழி. கண்ணகி விருத்தம். துறவறம் - என திருக்குறளைச் சமுதாயத்தோடு பொருத்திப் பார்த்து கட்டுரைகளை வெளியிட்டு வந்த இதழ் இது. "அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர், பற்றிலர் நாணாப் பழி" என்ற குறள்வழி 'உங்கள் ஓட் யாருக்கு?' என பேராசிரியர் ஜி.சுப்பிரமணிய பிள்ளை எழுதியுள்ள கட்டுரை நுட்பமாக இருக்கிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,