வெண்ணிலா இதழ். 1953 களில் வெளிவந்த இனிய மாதப் பத்திரிகை. விலை எட்டணா. மக்களைக் கவருகிற வகையில் சினிமாச் செய்திகள், சிறுகதை, துணுக்குகள் எனப் பல்சுவையோடு வெளியிட்டுள்ள இதழ். அட்டைப்படக்கதை, சுவையான கேள்வி பதில்கள் எனத் தொடர்ந்துள்ளது. எல்லார்வி எழுதிய நாவல்கள் இந்த வெண்ணிலா வெளியீடாக சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. ஆண்டன் செக்காவ் எழுதிய தாசியும் மனைவியும் என்ற கதை இந்த இதழில் காணப்படுகிறது. முதல் சந்திப்பு என ஆண்களும் பெண்களும் தங்களது முதல் சந்திப்பு பற்றி எழுதுவதாக ஒரு தொடரைத் தொடங்கியுள்ளது. உங்கள் வீட்டுப் பெண்கள் என பெண்கள் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது. 80 பக்கங்களில் மக்களைக் கவருகிற வகையில் இந்த இதழானது தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,