கலாவல்லி : 1955 டிசம்பர் மாதம் வெளிவந்த மாலை1 மலர்12 இதழ் இது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து பி.எம்.கண்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது. புயலுக்கு விரைந்து உதவிய காமராசரின் தன்மையை வாழ்த்துகிற வகையில் கார்டூன் வெளியிட்டுள்ளது. தலையங்கம், அன்பர்களுக்கு ஒரு வார்த்தை, இலக்கியம், சிறுவர்பகுதி, பாட்டு, கார்டூன் எனப் பல்சுவையில் ஈர்ப்புடன் வெளியிட்டுள்ளது. நா.பார்த்தசாரதி ஐந்திணைக்காட்சிகள் பற்றி எழுதியுள்ளார். ஆசிரியர் எழுதியுள்ள நிலவுத் தாமரை தொடர்கதை சுவையானதே. எஸ்.வி.ஆர் எழுதிய நியதி, புஷ்பதுரை சுப்பிரமணியம் எழுதிய நடிகை நமூனா சிறுகதைகள் கவரும் வகையில் உள்ளன. எங்கள் கலாவல்லி என வாசகர்களது கடிதங்களையும் வெளியிட்டுள்ளது. சிறுவர் பகுதியில் ராங்கிக்காரி என்று சிறுவர்களுக்கான சுவையான கதையை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,