தமிழ் முழக்கம், ஆசிரியர் : கவி.கா.மு.ஷெரீப். 1955 இல் மாதமிருமுறை இதழாக சென்னை 14, மீர்சாகிப் பேட்டையிலிருந்து வெளிவந்த இதழ். படத்திலுள்ளது 1955 சூலை 1 இல் வெளிவந்த 4 ஆம் ஆண்டின் 12 ஆவது இதழ். சிறுகதை, கவிதை முழக்கம், சிலப்பதிகார விருந்து, மாதர் பகுதி, காதில் விழுந்தது, கிளறல் என தமிழுணர்வுச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. பதிப்பகம் வைத்து ஆசிரியரின் நூல்களை பரவலாக்கியுள்ளளது. இதழில் தென்னாற்காடு மாவட்ட தமிழரசுக்கழக 2 வது மாநாடு சிதம்பரம் கவிமணி பந்தலில் நடைபெறுவது பற்றிய துண்டறிக்கையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,