தமிழன் குரல் : ஆசிரியர் ம.பொ.சிவஞானம். இது 1955 சூலை மாதம் வெளிவந்த முதலாமாண்டின் 12 ஆவது இதழ். சென்னையிலிருந்து வெளிவந்தது. முதலாமாண்டிற்குப் பிறகு ம.பொ.சி நடத்தி வந்த செங்கோல் வார இதழைப் போல வார இதழாக வெளியிடவிருப்பதாக இதழில் அறிவித்துள்ளது. கவிதை, கட்டுரை, துணுக்கு என செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

இதழில் வெளியான குறிப்பு இது :- உண்மையான சுதந்திரம். ஏழ்மைத் தனம் இருக்கும் வரையில், பொருளாதார சுதந்திரம் இல்லாத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது பகற்கனவேயாகும். பட்டினியால் வாடும் ஒருவனை சுதந்திர புருஷன் என்று கூறுவது அவனைப் பரிகசிப்பது போலாகும். பொருளாதார சுதந்திரப் போராட்டம் இன்று உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு தேசத்தில்தான் ஜனங்கள் போரிட்டு இந்தப் பொருளாதார சுதந்திரத்தை அநுபவித்து வருகிறார்கள் என்று சொல்ல முடியும். அந்த தேசம் சோவியத் யூனியன் எனப்படும் - உலக சரித்திரத்தில் பண்டித நேரு.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,