தினத் தபால் : ஆசிரியர் - சுந்தரம். நாளிதழ் வடிவில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பெங்களூரிலிந்து வெளிவந்த இதழ் இது. இந்த இதழ் மூன்றாவது ஆண்டின் 60 ஆவது இதழ். 4 பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த இதழின் விலை அரை அணா. சினரிமாச் செய்திகள், அரசியல், நடப்பியல் எனப் படிப்பவர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை வெளியிட்டுத் தொடர்ந்துள்ளது. " பட்டம் தாணு சீறுகிறார், சபாநாயகர் உறுமுகிறார், பனம்பள்ளி கொக்கரிக்கிறார் " இது போன்று செய்திகளைத் தூண்டிலாக்கி படிப்பவர்களை ஈர்த்துள்ளது. இந்த இதழில் எம்.எஸ்.ஜனகராஜன் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை ஆங்கிலம் கலந்து பேசிய இராவணன் வெளியாகியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,