சாட்டை - 1956 இல் ம.பொ.சி. பொன்விழா மலராக இதழ் வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள கா.மு.ஷெரீப் அவர்களது தமிழ் முழக்கம் அச்சகத்தில் அச்சாகி வெளிவந்தது. ஆசிரியர் ஏ.பி.நாகராஜன். ம.பொ.சி. அவர்களது பன்முக ஆற்றலை பல்வேறு பார்வையாளர்களின் கருத்துகள் வழி சிறப்பாக வெளியிட்டிருக்கும் இதழ் இது. அரசியல்வாதி மட்டுமல்ல அச்சுக்கோர்க்கும் கலைஞன் எனப் அச்சுக்கோர்க்கும் ம.பொ.சி யின் படத்துடன் கட்டுரை எழுதியுள்ளது கருத்து விதைப்பிற்காக ம.பொ.சி அவர்கள் எத்துணை இடர்பாடுகளுள் மூழ்கியிருந்தார் என்பதை அறியமுடிகிறது. மறைந்த எல்லையை மீட்கப்போராடிய மாவீரர் என்பதை வினாயகம் அவர்களது கட்டுரையின்வழி அறிய முடிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,