சர்வோதயம். 1956 களில் சர்வோதயப் பிரசுராலயம், சீனிவாசபுரம், தஞ்சாவூரிலிருந்து வெளியிட்ட இதழ் இது. இது ஒன்பதாம் ஆண்டின் 11 ஆவது இதழ். இதழின் தொடர் எண் 107 என்று குறித்துள்ளது. இதழ் காந்தியின் கொள்கைகளைப் பரப்புகிற கட்டுரைகளையும், திலகர், வினோபா, காந்தி போன்றவர்களது கருத்துகளையும் மக்களிடம் கொண்டு செல்கிற வேலையைச் செய்துள்ளது. இந்த இதழின் பூதான இயக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு மக்களிடம் சர்வோதயக் கருத்துகளை இது விதைத்துள்ளது. இதழில் வினோபா அவர்கள் குன்றக்குடி அடிகளாரிடம் உரையாடிய உரையாடலின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இதழில் இருளில் ஒளி என்கிற துறைவன் இயற்றிய காந்தியடிகளின் வரலாறு தொடராக வெளிவந்துள்ளது. வினோபா அவர்களின் கால்நடை பற்றிய குறிப்பும், பூதான இயக்கம் வழி பெற்ற நிலங்கள் பற்றிய குறிப்பும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,