இதழ் வழியாகக் கருத்தளித்த திராவிட இயக்கப் போர்வாள். சென்னையிலிருந்து காஞ்சி மணிமொழியார் வெளியிட்ட இதழ். 1957 இல் வெளிவந்த இந்த இதழ் 9 ஆம் ஆண்டின் பொங்கல் மலர். அடக்குமுறைக்கு ஆளான அன்பழகன், தில்லை வில்லாலன், சத்தியவாணிமுத்து, என்.வி.நடராசன் என வெளியாகியுள்ள பழைய படங்களைப் பார்க்கும் பொழுது நெஞ்சு நிமிர்கிறது. திராவிட இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் நிழலாடினர். முடியரசன், சுரதா அவர்களது மரபுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காண்டேகர் ஒரு புரட்சிக்காரர் என அண்ணா எழுதிய படைப்பு வீரமூட்டுவது. தில்லை வில்லாலன் எழுதிய குருடன் கோட்டை சுவை கூட்டுவதே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,