குயில் - பாரதிதாசன் நடத்திய கிழமை இதழ். விலை 13 காசுகள். புதுச்சேரியிலிருந்து வெளியான இதழ் 9 - 1958 சூலை திங்களில வெளியாகியுள்ளது. மரபுக் கவிதைகளை முதன்மைப் படுத்திதோடு, தமிழ் உணர்வை ஊட்டுகிற வகையில் மிகத் தரமாக வெளிவந்த இதழ் இது. இதழில் வெளியான ஒரு கவிதை.

அருணாசலக் கவிராயர் வடவேங்கடத்திற்குச் சென்றபோது சொன்னது.

வடவேங்கட மலையில் வாழ்முருகா நிற்கும்
திடமோங்கும் நின்சீர் தெரிந்து - மடமோங்க
நாமத்தைச் சாற்றினார் நம்மையும்என் செய்வாரோ
காமுற்றிங் கார்இருப்பார் காண்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,