இதழ் பெயர் - செந்தமிழ். 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த இதழ் இது. இது 54 ஆம் ஆண்டின் முதல் இதழ். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக, தமிழுணர்வோடு, தமிழியச் செய்திகளை வெளியிட்டு, தமிழுக்காக இயங்கிய திங்களிதழ். பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும், தரமான தமிழ் எழுத்தாளர்களையும் இணைத்து, படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளது. சங்கத்தமிழ், தற்கால நிலை, தமிழ் வளர எனத் திட்டமிட்டு பல்வகையான கட்டுரைகளையும் ஆய்வு நோக்கில் வெளிவந்த உயர் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. இதழ் வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாகத் தரமான தமிழ் நூல்களையும் வெளியிட்டுப் பரவலாக்கியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,