அருள் மாரி. 1959 களில் காரைக்காலிலிருந்து வெளிவந்த ஆன்மிகத் திங்களிதழ். ஆசிரியர் ஸ்ரீகாந்த இராமானுஜன். இந்த இதழ் இரண்டாமாண்டின் 11 ஆவது இதழ். அருள்நெறி பரப்பும் அருந்தமிழ் திங்கள் வெளியீடு. தொண்டே செய்து, என்றும் தொழுது வழியொழுகப் பண்டே பரமன் பணித்த பணி - என நம்மாழ்வார் பாசுரத்தைத் தலைப்பிலிட்டுள்ளது. தரமான கட்டுரையாளர்களை இணைத்துக் கொண்டு படைப்புகளை வெளியிட்டுள்ளது. ராமானுஜர் கருத்துகளை உள்வாங்கி அதன் வெளிப்பாடாக இதழை வடிவமைத்துள்ளது. கண்ணபிரானின் திருவடிகளைத் தொழுதும், அதன் பல்வேறு நலன்களை இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டியும் இதழைத் தொடர்ந்துள்ளது. ஆசிரியரின் கூற்று இது - பழந் தமிழர் பெருநெறியும் அருந்தமிழும் தழைக்கத் தொண்டாற்றும் இப்பத்திரிகை, சமயம், காந்தியம், இலக்கியம், சன்மார்க்கச் சிறுகதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதலியன தாங்கி, இனிய எளிய தமிழில் வெளிவருகின்றது - ஆண்டு சந்தா ரூபாய் நான்கு -


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,