வைத்திய சந்திரிகா - தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டல மாதப் பத்திரிகை. இந்த இதழ் 22 ஆம் ஆண்டின் எட்டாவது இதழ். வெளிவந்த ஆண்டு ஆக.1960. திருச்சியிலிருந்து வெளிவந்த இதழ். ஸ்ரீரங்கம் பண்டித மே.சுந்தரராஜாச்சார்ய ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். ஆண்டுச் சந்தா ரூ5. இந்திய அளவிலான ஆயுர்வேத ஆராய்ச்சிகள், ஆயுர்வேத பட்டப்படிப்புகள் போன்றவற்றை மிகச் சிறப்பாகத் தமிழில் தந்துள்ளது. தமிழ் விவரணம் என உடற்கூறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. மருந்துப் பெயர், ஆக்கும் முறை, பயன் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. (எ.கா திரிபலாலெளஹம் (பை.ர.) திரிபலை, கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், சர்க்கரை, திப்பிலி, நாயுருவிவிதை, அயஸ்ஸிந்தூரம் இவை சமஅளவு சேர்த்தரைத்து 4 யவ அளவு சாப்பிட பஸ்மகம் நீங்கும்) தமிழாக்குவதில் நுட்பம் காணாது செய்தியை அப்படியே பதிவுசெய்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,