தமிழணங்கு. புதுவையிலிருந்து தரமாக வெளிவந்த திங்களிதழ். 1960 நவம்பர் திங்களில் ஆசிரியர் வித்வான் மு.வேலாயுதனார் அவர்களால் தொடங்கப்பட்ட இதழ். இலக்கணம், இலக்கியம், மற்றும் அறிவியல் சம்பந்தமான கட்டுரைகளோடு கவிதைகளுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் தந்து தொடர்ந்து வெளியிட்டுள்ளது. புதுவையில் தொடந்து வெளிவந்த இந்த இதழின் ஏழாமாண்டு தொடக்க இதழின் அட்டைப் படத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அரவிந்தர் வர்லாறும், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பும் இந்த இதழில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றவைகள். நுட்பமான சங்க இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,