சாரணர் : 1962 இல் வெளியான 121 ஆவது இதழ் இது. மதுரையிலிருந்து வெளியான சாரணர் இயக்கம் தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியான இதழ். பள்ளிகளில் சாரணர் இயக்கம் தொடங்குவது பற்றியும், சாரணர் இயக்கத்தினால் மாணவர்கள் பெறுகிற நன்மைகள் பற்றியும் இதழ் விவரித்து வந்துள்ளது. மாணவர்களது பன்முக ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் எப்படிச் சாரணர் இயக்கம் இயங்குகிறது என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறது. மாணவர்களுக்கான பாடல்கள் வெளியிடுவதோடு, சாரணர் முகாம்கள் பற்றிய குறிப்பையும் தந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,