இராம. அரங்கண்ணல் வெளியிட்ட அறப்போர். 1962 இல் அறப்போர் இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் மலர் இது. அண்ணாவின் அறப்போர் கட்டுரையும், நாவலரின் பொங்கலோ பொங்கலும், கலைஞரின் எனது பணி கட்டுரையும், நாஞ்சிலாரின் சட்டமன்றம் செல்வதேன் கட்டுரையும், க.அன்பழகனின் வெற்றிவாகை சூடுவோம் கட்டுரையும் - ம்லரில் காணப்படுகிறது. மலருக்குச் சிறப்புச் செய்வது கா.அப்பாதுரையின் புதியதோர் உலகம் செய்வோம் கட்டுரை. அரங்கண்ணலின் குறுநாவல் நான் ரெளடியா சார் ஈர்ப்புடையதே. அரசியல் பொங்கல் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கார்டூனில் - காமராசர் கலக்கல் பொங்கல், பெரியார் பணப்பொங்கல், சம்பத் சுயநலப்பொங்கல், அண்ணா அன்புப் பொங்கல், மக்கள் காணிக்கைப் பொங்கல் என மக்கள் சூரியனுக்கு ஓட்டளிப்பதாகக் கோட்டோவியம் வரைந்துள்ளது. இப்படி உளவியல் அடிப்படையில் மக்களுக்குள் ஏற்றப்பட்ட செய்திகள்தான் மக்களை திராவிட அரசியலுக்கு ஈர்த்தது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,