குமரகுருபரன். 1962 இல் வெளிவந்துள்ள இந்த இதழ் 13 ஆவது ஆண்டின் மூன்றாவது இதழ். தனிப்பிரதி 13 நயாபைசா. ஆண்டு சந்தா ரூபாய் ஒன்றரை. வைகுண்டத்திலுள்ள குமரகுருபரன் அச்சகத்தில் அச்சாகி வெளிவந்துள்ளது. ஆசிரியர் குமரகுருபரன் பிள்ளை அவர்கள். திருமுருகனின் நெறிமுறைகளைப் பரப்புகிற ஆன்மிக, சைவ சமயக்கருத்து விதைப்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. இதுபோன்ற இதழ்களை வாங்குவது என்பதே புண்ணியமான காரியம் எனக் கருத்து விதைக்கப்படுவதால், படிக்கப்படுவதைவிடப் பாதுகாத்து வைக்கப்படுவது அதிகமாக இருக்கிறது. இதழ் தொடர்நது வருவதற்கும் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்கிறது. இலக்கியங்களிலிருந்தும், விற்பன்னர்களின் கருத்துரைகளிலிருந்தும் ஆன்மிகக் கருத்து விதைப்புச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,