இயற்கை. 1962 தமிழ்த் திங்கள் இதழாக சனவரித்திங்களில் தொடங்கப்பட்ட இதழ். இது முதல் இதழ். திரு சரவணபவானந்தர், மூர்த்தி ஆகிய இருவரும் ஆசிரியராக இருந்துள்ளனர். சென்னையிலிருந்து வெளிவந்தது. அறிஞர் அண்ணா அவர்களது இயற்கைப் புலவன் கட்டுரை உள்ளது. பிலோ இருதயநாத்தின் பயணக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழிலுள்ள இரண்டு விளம்பரங்கள் வியப்பில் ஆழ்த்தின.1) மதுரை பொன்னையா வின் கமக ஹார்மோனிய கம்பெனி முன்பக்க உள் அட்டையிலும், 2) ராஜரெத்தினம் இயக்குகிற மாடர்ன் சினிடோன் தயாரிக்கும் திருவள்ளுவர் படம் பற்றிய விளம்பரம் பின் அட்டையிலும் உள்ளது. திருவள்ளுவர் படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் சரவணபவானந்தர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,