மதுர மித்திரன். 1963 களில் சென்னையிலிருந்து என்.சுப்பிரமணியம் வாரப்பதிப்பாக வெளியிட்ட இதழ். தேசியம் தெய்வீகம் கம்பன் எனக்காட்டுகிற இதழ். ".....கருத்துகளை வெளியிடும் பொழுது காங்கிரஸ் தியாகிகளின் நிலையை மனதில் கொண்டு கருணை காட்டுமாறு காங்கிரஸ் அக்ராசனரைப் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்" - என்று தலையங்கத்தில் எழுதியுள்ளது.. காங்கிரசுக்குப் புத்துயிர் அளிக்க புதிய நடவடிக்கை, காதற்கடிதம் கைமேற்பலம் சிறுகதை, கம்பர் கவி இன்பம், சினிமாச் செய்தி - என இதழில் வெளியிட்டுள்ளது. கருத்தும் வெளிப்பாடும் பொழுதுபோக்கை முதன்மைப்படுத்தி வணிகம் செய்ததையே உறுதிப்படுத்துகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,