பரிதி - 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதழ் இது. வடஆர்காடு மாவட்டம், காட்டுப்பாடி, மேகலை இல்லத்திலிருந்து இந்த இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்றாவது இதழ். சினிமாச் செய்திகளை இதழில் வெளியிட்டுள்ளது. வல்லிக்கண்ணன் எழுதியுள்ள ஒரு காதல் கதை இதழில் வெளியாகியுள்ளது. ரதி சொல்கிறாள் என்று வாசகர்களின் வினாக்களுக்கு விடையளித்துள்ளது. துரை.பிச்சை குறுந்தொகைப் பாடல்களின் வழி தமிழின்பம் காட்டியுள்ளார். தனுஷ்கோடியில் புயலால் ஏற்பட்ட அழிவுக்காக இதழின் தலையங்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது. இசைப்பாடல்களும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,