கட்சி சார்பற்ற பகுத்தறிவுக் கொள்கை ஏடு. 1965 இல் சா.குத்தூசி குருசாமி அவர்களால் நடத்தப்பட்ட கருத்து விளக்க இதழ். சென்னையிலிருந்து ஒவ்வாரு மாதமும் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதழில் வெளியான கோட்டோவியப் படங்கள் கருத்தை எளிமையாக விளக்குவதாக உள்ளன. உருவகக் கதைகளின் வழி உணர்வூட்டியுள்ளது. தெய்வீகக் கொலை என மதம் தொடர்பாக நடத்தப்படுகிற கொலைகளை சான்றுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது. அறிவியக்கம் கண்டு விளக்கியுள்ளது. உடுமலை சாந்திதாசன் மரபுப்பாக்களின் வழி பகுத்தறிவுக் கருத்துகளை விளக்கியுள்ளார். வி.பொ.பழனிவேலனார் புகைப்பிடித்தலைக் கைவிட முடியுமா ? என்ற ஆங்கில மொழிபெயர்புக் கட்டுரையை எழுதியுள்ளார். கடிதப்பகுதியும் இதழில் உண்டு.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,