நாடக முரசு. 1965 களில் வார இதழாக வெள்ளிதோறும் அருப்புக்கோட்டை எஸ்.கருப்பையா அவர்களால் பத்துகாசு விலையில் வெளியிடப்பட்ட நாடக இதழ் இது. அரங்கேறிய நாடகங்கள் என நடக்கிற நாடகங்கள் பற்றிய விமர்சனத்தையும், நாடகம் தொடர்பாக இயங்குகிற நடிகர்கள், கதை ஆசிரியர்கள், நடனக்குழுக்கள் என நாடகக்காரர்களை படத்துடன் குறிப்பும் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. குணச்சித்திர நடிகர் பாலையா, நடிகர் டி.ஆர்.ராஜன் என சினிமா நடிகர்களைப் பற்றியும் எழுதியுள்ளது. திரைச் செய்திகள் என சினிமா பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. முரசுவின் பதில்கள் என கேள்வி பதிலையும் வெளியிட்டுள்ளது. ஆசிரியருக்கு என வந்த மடல்களையும் வரிசைப்படுத்தியுள்ளது. சிறப்பு உறுப்பினர் எனப் படத்துடன் குறிப்பும் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் இதழை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. மக்கள் விரும்புகிற வகையில் பல்சுவையாக நாடகச் செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,