முப்பால் ஒளி. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் ஆசியரியராக இருந்து வெளிவந்த இதழ். டிசம்பர் 1996 இல் இந்த இதழின் முதல் வருட 11 ஆவது இதழான இந்த இதழ் சென்னையிலிருந்து வெளியாகியுள்ளது. திருவள்ளுவராண்டைத் தலைப்பிலிட்டு திருக்குறளின் பல்வேறு நுட்பங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமாகத் தொடர்ந்துள்ளது. இதழின் பக்கங்களில் தொடர் எண் காணப்படுகிறது. ஆண்டு வரி ரூபாய் 12 என அறிவித்துள்ளது. புரவலராக கி.ஆ.பெ. அவர்களும், வாழ்நாள் உறுப்பினராக ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், பெங்களூர் சி.என்.சாமி யும் இருந்துள்ளனர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,