புதிய தலைமுறை. 1967 இல் தொடங்கப்பட்ட இதழ் இது. தத்துவ இலக்கியத் திங்களிதழ் என்று தலைப்பிலிட்டு முற்போக்குக் கருத்துகளைத் தரமாக விதைத்துள்ளது. வீரியமாக விதைத்ததால் தேடுதலுக்கும் உள்ளானது. ஊழிக்கூத்து சிறுகதை நெருக்குதலுக் குள்ளாகும் பெண்மையின் அவலத்தைக் காட்டுகிறது. புலவர் ஆதி மனிதனும் பொருளும் எனத் தத்துவ விளக்கம் அளித்துள்ளார். கல்கி. கலைமகள், ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதையைத் திறனாய்வு செய்துள்ளது. மாணவர் பகுதியும் இடம்பெற்றுள்ளது. கனல், புலவர்.ந.ஆறுமுகம் இருவரது பாக்களும் இதழில் இடம் பெற்றுள்ளன. 25 காசு விலையில் ஆ.நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கோவையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. பதிவு பெற்ற இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,