அருள். 1967 களில் தென்னாட்டில் சிறந்த சன்மார்க்கப் பத்திரிகை என அறிவித்து, சென்னை தியாகராய நகரிலிருந்து இரா.மணிமேகலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மாதஇதழ். இந்த இதழ் முதலாமாண்டின் ஏழாவது இதழ். கிருபானந்த வாரியார், வி.ஜிபி பன்னீர்தாஸ், எம்.பக்தவச்சலம், பொள்ளாச்சி மகாலிங்கம் எனப் பொருள் நிறைந்தவரின் அருளாசியாக இரு மலர்ந்துள்ளது. இதழில் வி.ஜி.பி., காளிமார்க், சக்தி டெக்ஸ்டைல்ஸ், வீகோ, அரிராம் சேட் த.பி.சொக்கலால் விளம்பரம் எனப் பொருளாளர்களின் அருள் பார்வை இதழில் பட்டுள்ளது. நின் கண்களில் கருணை ஒளிர்கிறது, நின் இதழ்களில் இசை மிளிர்கிறது, நின் இதயம் அன்பை வார்க்கிறது, நின் பெருமை எம்மை ஈர்க்கிறது - என அரிராம் சேட் படத்தினை வெளியிட்டுக் கீழே எழுதியுள்ளது - இதழுக்கு அருள் கிடைக்காமலிருக்குமா? - இடையில் வள்ளலார் கருத்துகளும் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,