தமிழ்த்தேன். 1967 களில் புலவர் கண்ணபிரானார் அவர்களும் கவிஞர் கா. வேழவேந்தன் அவர்களும் இணைந்து வெளியிட்ட தமிழுணர்வுத் திங்களிதழ். இதழ் சென்னையிலிருந்து அச்சாகி 48 பக்கங்களில் வெளிவந்துள்ளது. சிறுகதை, குறிப்புகள், கட்டுரை, மரபுப்பாடல்கள் எனத் தொடர்ந்துள்ளது. பூவண்ணனின் கொல்லிமலைச் செல்வி என்ற சிறுகதை தொடராக வெளிவந்துள்ளது. பெண்ணுரிமை பற்றி எழுத தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது. கா.வேழவேந்தன் கிராமத்தலைவர்களைச் சந்தித்து கருத்தறிந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன. இதழ் தமிழுணர்வோடு அரசியல் உணர்வையும் விதைத்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,