முதல் சித்தன். 1967 களில் மதுரையிலிருந்து ஒவ்வொரு ஆங்கில மாதமும் 15 ஆம் தேதி பண்டிட் முத்துக் கருப்ப பிள்ளை அவர்களால் சித்த மருத்துவ இதழாக வெளியிடப்பட்டது. விலை 50 காசுகள். இலக்கியமும் மருத்துவமும், ஞான சித்தர்களும் சித்த மருத்துவமும், வர்ம ஏடு, குறுநில மன்னரும் கோட்டை மருத்துவமும், சித்த மருத்துவம் செய்முறை, சாமுத்திரிகா இலட்சணம், ஏட்டு அனுபவ மருந்துகள், நச்சும் முறிவும், மா (பொருட்பண்பு விளக்கம்), சங்கச் செய்திகள், ராசி பலன்கள் என்பவை இந்த மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள். இதழ் அரசின் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. இதழில் சர்வரோக சஞ்சீவித் தைலம், சஞ்சீவி மாத்திரை, சித்த மருந்துகள், சித்தர் நவலோக கற்பம் - என மருத்துவப் பொருள்களின் விளம்பரங்கள் வந்துள்ளன. இந்த இதழ் இரண்டாமாண்டின் 5 ஆவது இதழ். பொருட் பண்பு விளக்கம் என்ற தொடரில் இந்த இதழில் மாமரம் தொடர்பான அனைத்து மருந்து உருவாக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,