1969 இன் இறுதியில் வேண்டும் நல்ல தமிழ் நாளேடு என்ற உணர்வில் தமிழ்க் குடிமகன் அவர்களால் திங்கள் ஈரிதழாக வெளியிடப்பட்ட தனித்தமிழ் இதழ். விலை 15 காசுகள். முன் அட்டையில் தமிழுணர்வு மரபுப்பாடல், உள்ளே தமிழியச் செய்திகள், கட்டுரைகள், நிகழ்வுக் குறிப்புகள் என தமிழை முதன்மைப்படுத்தி இதழ் தொடர்ந்துள்ளது. கல்லூரிகளில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. நூல் அறிமுகமும் செய்துள்ளது. உலகத் தமிழ்க் கழகம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது. தெளிதமிழ்ச் சிந்தனையாளர்களது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது. மதுரையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது.( தமிழ்க் குடிமகன் நடத்திய தனித்தமிழ்த் தாளிகை )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,